13 Aug 2015

முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் இராஜனமா செய்ய வேண்டும்- ஜெமீல்

SHARE

அகில இலங்கை மக்கள் காங்கிறஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13.08.2015) பி.ப 4.00 மணிக்கு அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த ஏ.எம்.ஜெமீல்இ


ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வெற்றியளிக்காவிட்டால் அந்தத் தலைவர்கள் தமது பதவிகளை இராஜனாமா செய்யும் நடைமுறை அங்கு பழக்கத்திலுண்டு. அமைச்சர் றவூப் ஹக்கீம் எமது கட்சி வேட்பாளர் இஸ்மயிலுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட வழக்கு அடிப்படைத் தன்மையற்றது என நிராகரிக்கப்பட்டுள்ளடு. இது எமது கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள அதேவேளை. அமைச்சர் றவூப் ஹக்கீம்   தனது அமைச்சுப் பதவியையும் அவர் கட்சியில் வகிக்கும் பதவிகளையும் உடனடியாக இராஜனாமா செய்ய முன்வரவேண்டும். எனக் கேட்டுக் கொண்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த் முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரும் வேட்பாளருமான எஸ்.எம்.இஸ்மயில் முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் நீதிமன்றம் சென்று இன்று மூக்குடைந்துள்ளார். நான் பாராளுமன்றம் சென்றால் நாளை காதை வெட்டிவிடுவார். இரண்டு காதுகளும் இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை கேட்கவில்லை ஒரு காது இருக்கும்போது முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை எவ்வாறு கேட்கப்போகிறது? என மக்கள் என்னிடம் கேட்கின்றனர் எனக்கூறினார்.
என்மீது சேறு பூசிய இந்த செயற்பாட்டுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத்தாக்கல் ஒன்றை செய்யவுள்ளேன். இந்தப் பணத்தை அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்துவேன் எனவும் தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: