இனத் துவேசத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்வதனை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு மேற்கொண்டு வருகின்றது கே.டபிள்யு.தேவநாயகத்திற்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி அழகுபார்த்தவர்கள் நாங்கள் அப்போது இல்லாத இனத்துவேசம் தற்போது ஏன் வந்தது அக்கலத்தில் வேதநாயகத்திற்கு முஸ்லிங்கள் வாக்களித்தமை பிழையா? என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் பி.சத்தியசீலனின் இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை (19) இடம் பெற்ற அதரவாளருடனான சந்திப்பின் போது உரையாற்றுகையிலையே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐக்கிய தேசியக் கட்சியில் இரு இனத்தினைச் சேர்ந்த மக்களும் போட்டியிடுகின்றார்கள். அதிலே விசேடமாக கணேசமூர்த்தி உட்பட நானும் போட்டியிடுகின்றோம். மட்டக்களப்பிலே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ்வாக்குகள் இருக்கின்றன. இவ்வாறு இருக்கின்ற பொழுது தமிழ்ப் பிரதேசங்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசம பிரச்சாரங்கள் மூலம் எமது கட்சியில் கேட்கின்ற தமிழ் வேட்பாளர்களுக்கு போடுகின்றவாக்கு முதன்மை வேட்பாளராகிய எனக்கு சென்றடையும் என்ற கேலிநாடகத்தை ஆடுகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலிலே முதன்மை வேட்பாளராகிய நான் தோல்வி அடைந்தேன். அதற்கு முன்பு நடந்த தேர்தலிலே ஹிஸ்புல்ல முதன்மை வேட்பாளராக இருந்த பொழுது கணேசமூர்த்தி அவர்கள் வெற்றியடைந்தார். இதற்கும் முன்னர் இடம் பெற்ற தேர்தலிலே கணேசமூர்த்தி முதன்மை வேட்பாளராக இருந்த பொழுது ஹிஸ்புல்லா வெற்றியடைந்தார். எனவே இவ்வாறு இருக்கும்போது இவற்றினை கூறுகின்றவர்கள் தமிழ் மக்கள் மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு பிரச்சாரங்களை எடுக்கின்றார்கள்.
இது ஜனநாயக நாடு நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டத்தினை நாங்கள் முன்னெடுக்க இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் இருக்கின்ற பெருவாரியான தமிழ் இளைஞர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சரைசாரையாக வாங்களிப்பதற்கு தயாராக இருக்கின்றார்கள். இந்த மாவட்டத்திலே இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய நிலமை இருக்கின்றது. அந்த வகையில் பட்டிருப்புத் தொகுதி மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஒட்டுமொத்த தமிழ், முஸ்லிம் சமூகமும் ஒன்றிணைந்து எமக்கு வாக்களிப்பீர்களாக இருந்தால். இரண்டு இனம் சார்ந்து ஒவ்வொருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியும். எனவே காலங்காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களை முறுக்கேற்றி பத்திரிகை மூலமாகவும் வேறு விளம்பரங்கள் மூலமாகவும் வெறும் அரசியலை செய்து கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்மைப்பு பலநெடுங்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் துவேசத்தினை மூலதனமாகக் கொண்டே அரசியலை செய்து வருகின்றனர். இதற்கு தமிழ் இளைஞர்கள் துணையில்லை என்பதனை இந் தேர்தல் அவர்களுக்கு பாடம் புகட்டும். என நினைக்கின்றேன்.
இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே இரண்டு சமூகங்களும் ஒன்றுமையுடன் இருக்க வேண்டியதேவை இருக்கின்றது. ஏனென்றால் இரண்டு சமூகத்தினைச் சார்ந்த யார்வென்றாலும் ஒவ்வொரு சமூகத்தினையும் அரவணைத்து சேவை செய்ய வேண்டும். கடந்த 1983 காலங்களில் கல்குடாத் தொகுதியில் எங்களுடைய மக்கள் கே.டபிள்யு. தேவநாயகம் ஐயாவுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பி அழகு பார்த்தவர்கள். அந்த நாட்களிலே நாங்கள் துவேசமாக பார்க்க வில்லை. இப்பொழுதும் தேவநாயம் ஐயா என்றுதான் கௌரவமாக அழைக்கின்றனர். இந்த காலகட்டத்தில் இரண்டு இனங்களும் துவேசமாக பார்க்கவில்லை. இப்பொழுது ஏன் துவேசம், பார்க்கின்றனர். தமிழ் மக்களுக்கு சாதகமாக வரும்போது சாதகமாகவும் தமிழ்மக்களுக்கு பாதகமாக வரப்போகின்றது என்று மக்களுக்கு பாசாங்கு காட்டி படம்காட்டுகின்றனர். இது ஐனநாயக தேர்தல் முறைக்கு உகப்பானது அல்ல. அவ்வாறாயின் முஸ்லிம்கள் தேவநாயகத்திற்கு வாக்களித்தமை பிழையான விடயம் என இப்பொழுது அவர்கள் கூறவேண்டும். எனவே இவ்வாறான துவேசத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளை எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்பதுதான் உண்மை என அவர் தெரிவித்தார்.
2 Comments:
Post a Comment