ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவரை ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் 6320 மில்லிகிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய ஒருவரையும் 7820 மில்லிகிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23 வயதுடைய ஒருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். இந்த சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
0 Comments:
Post a Comment