5 Mar 2015

இந்தியாவின் சாதனையை முறியடித்த அவுஸ்திரேலியா

SHARE
உலகக் கிண்ண வரலாற்றில், அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இந்திய அணியின் சாதனையை இன்று, அவுஸ்திரேலியா தன்வசப்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ண லீக் தொடரின் 26வது போட்டியில் இன்று அவுஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய ஆஸி. அணி வீரர்கள் அதிரடியாக ஆடி ஆப்கான் பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோனர் 133 பந்துகளை எதிர்கொண்டு, 19 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்களாக 178 ஓட்டங்களைக் குவித்தார்.

மேலும் ஸ்டீவன் ஸ்மித் 95 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 88 ஓட்டங்களையும் விளாச, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 417 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

முன்னதாக 2007ம் ஆண்டு பேர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற 413 ஓட்டங்களே, உலகக் கிண்ணப் போட்டிகளில் அணி ஒன்று பெற்ற அதி கூடிய ஓட்டங்களாக இருந்தது.
SHARE

Author: verified_user

0 Comments: