5 Mar 2015

கட்டடக் கலைஞர்களுக்கான கண்காட்சி 2015 இல் ‘சவி பியச’வை அறிமுகம் செய்த லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம்

SHARE
இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தினால் அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கட்டடக் கலைஞர்கள் கண்காட்சி 2015” கண்காட்சியில், கட்டுமான மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சாலைகள் இணைந்து தமது பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தியிருந்தன.

இதன் போது 270 கூடங்கள் மற்றும் 170 பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சியில் முதன்முறையாகக் கலந்து கொண்ட லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்த குறைந்த விலையில் சிறந்த வீட்டை அமைக்கும் திட்டமான ‘சவி பியச’ என்ற திட்டத்தை அடிப்படையாக வைத்து கண்காட்சிக் கூடத்தில் தமது நிறுவனத்திற்கென்ற கூடம் ஒன்றை அமைத்திருந்தது.

“சிறந்த நகரை உருவாக்குவோம்” என்ற திட்டத்தின் ஒரு அங்கமான இந்த ‘சவி பியச’ என்ற திட்டம் உலகம் முழுவதும் லபார்ஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. இந்த கண்காட்சியின் போது குறைந்த செலவில் எவ்வாறு ஒரு சிறந்த வீட்டை அமைப்பது என்பது தொடர்பாக தமது கூடத்தை பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு லபார்ஜ் நிறுவன பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த லபார்ஜ் மகாவலி சீமேந்து நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் சார்லட் போவ்ட்புல் கருத்து தெரிவிக்கையில், ‘சவி பியச’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இலங்கையிலுள்ள தனிப்பட்ட நபர்களுக்கு அவர்களது கனவு இல்லத்தை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது தொடர்பாக அறிவையும் கட்டுமானத ;துறை மற்றும ; கட்டடக் கலை தொடர்பான அறிவினையும் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும். “இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் எமது விற்பனையாளர்களின் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிதி உதவிகள் மூலம் கட்டுமான தரத்தை மேம்படுத்துவதே ஆகும்.

அத்துடன் தமது கனவு வீட்டை அமைத்துக் கொள்வதற்காக நாம் கட்டுமான மற்றும் சிறந்த அளவீடு, வீட்டு திட்ட வரைப்படம் மற்றும் எண்ணிக்கை தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குவதோடு வீட்டுரிமையாளர்களுக்கான நிதி வசதிகளும் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக குறைந்த விலையில் கவர்ச்சியான வீடொன்றை அமைத்துக் கொடுப்பதே எமது எண்ணம். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக எமது இலச்சினையுடன் கைகோர்த்து சில வங்கிகள் இந்த சேவையை செய்ய முன்வந்திருக்கின்றன.

இந்த கண்காட்சியில் கலந்து கொண்டதனால் 300க்கும் அதிகமானோரது வேண்டுகோள் விண்ணப்பப் பத்திரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளமையானது ‘சவி பியச’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு கிடைத்த ஒரு நல்ல ஆரம்பமாகும்” என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: