அரசாங்கத்தின்
100 நாள் வேலைத்திட்டததின் கீழ் மூதூர் பிரதேச செயலகத்தில் பல
வேலைத்திட்டங்கள் நேற்று(24) மாலை மூதூர் பிரதேச செயலாளர் யூசுப்
தலைமையில் நடைபெற்றது.
முழுநாளும் இடம்பெற்ற இந்நிகழ்வுகளின்
ஆரம்ப நிகழ்வுகளில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார
பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
நேற்று மாலை வேளை நடைபெற்ற நிகழ்வுகளில்
உள்நாட்டு போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் உட்பட பலரும் இதில் கலந்து
சிறப்பித்தார்கள்.
வாழ்வாதார உதவி வழங்கல் பிரதேச செயலக
மட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
உட்பட பல நிகழ்வுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment