10 Feb 2015

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற அரையாண்டு பரிசீலனை நிகழ்வு

SHARE
(ஷமி)
மட்டக்களப்பு பிரதேச பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட வெல்லவெளிப் பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பரிசீலனை நிகழ்வு 10ம் திகதி செவ்வாக்கிழமை காலை 7.00 மணியளவில் நிலையப் பொறுப்பதிகாரி வெலகேதர தலைமையில் நடைபெற்றது.

இந்த பரிசீலனை நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க அவர்கள் வருகை தந்திருந்தார். ஆரம்ப நிகழ்வாக பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணி நடை மரியாதை நடைபெற்றது பின்னர் அணி நடை மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் ஒவ்வொரு பொலிஸ உத்தியோகத்தர்களின் சேவைக்காலம் மற்றும் செயற்பாடுகளை கேட்டறிந்தார். ஆதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான உடமைகளையும் பார்வையிட்டார்.














SHARE

Author: verified_user

0 Comments: