26 Feb 2015

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி - கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில், டெங்கு தொற்றுக்கு உள்ளானவர்கள் காணப்படுவதால், இப் பகுதியில் டெங்கு வேலைத்திட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 2015.02.23ம் திகதி வரை எழுபத்தைந்து பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிறைந்துரைச்சேனையை சேர்ந்த சிறுவன் ஒருவனும் மரணித்துள்ளார்.

பிறைந்துரைச்சேனை 206ஏ வடக்கு மற்றும் 206சி தெற்கு ஆகிய இரண்டு கிராம சேவகர் பிரிவுகளிலும், 35 பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளதாக, இனங்காணப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோகர் எம்.எஸ்.நௌபர் இதனைத் தெரிவித்தார்.

இதனையடுத்து ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதிகாலையிலும், மாலை வேளையிலும் பிரதேசத்தில் புகை விசிரப்பட்டும் வருகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: