கிழக்கு மாகாணசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சுப் பதவியியை தற்போது தங்களது கைகளில் எடுத்திருக்கின்றார்கள். ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் சில வேலைத் திட்டங்களை செய்யவேண்டி இருக்கின்றது. அதன்காரணமாக நாங்களும் இந்த கிழக்கு மாகாணசபையில் இணைந்து ஆட்சியதிகாரத்தினை செய்ய வேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் க.குணரெத்தினம் தலமையில் வித்தியாலய மைதானத்தில் திங்கட் கிழமை மாலை (16) மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சத்தியநாதன்இ பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஞா.சிறிநேசன்இ எஸ்.மகேந்திரகுமார் கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.தயாசீலன் ஏனைய அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்…..
கடந்த கிழக்கு மாகாணசபையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப் பட்டார்கள் பாடசாலை சிற்றூழியர் நியமனங்களில் கூட தமிழ் இளைஞர்கள் முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டு வேறு இனம் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்குரிய நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததே நாம் அனைவரும் அறிந்த உண்மை.
குறிப்பாக மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் இருக்கும் பாடசாலைகளுக்கு அம்பாறையில் இருக்கும் (சம்மாந்துறைஇ நிந்தவூர்) முஸ்லிம் இளைஞர்களுக்கு நியமனங்களை வழங்கி வேலைக்கமர்த்திய கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றமை தமிழ் மக்களுடைய இருப்பை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.
இவ்வாறான மிகவும் மோசமான நிலமைகளை தொடர்ந்து அனுமதிக்கமுடியாது இதனை தடுக்கவேண்டிய தார்மீகக் கடமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு இருக்கின்றது மனச்சாட்சிப்படி கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய 11 ஆசனங்களை பெற்றவர்கள் நாங்கள் அந்த வகையில் முதலமைச்சர் பதவியினை பெறவேண்டியவர்களும் நாங்கள்தான் இருந்தபோதும் முஸ்லிங்காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்று தற்போது முதலமைச்சுப்பதவியினை திட்டமிட்டு தன்வசப்படுத்தியிருக்கின்றார்கள்.
இருந்தபோதும் எமது கிழக்கு மாகாண தமிழ்மக்களின் எதிர்கால நலன்கருதி நாங்கள் அவர்களுடன் இணைந்து இரண்டு அமைச்சுக்களும் ஒரு பிரதி தவிசாளர் பதவியினையும் ஏற்று அந்தப்பதவியினை ஏற்பதற்கு இருக்கின்றோம். இதனை ஏற்பதென்பது நாங்கள் ஏதோ முஸ்லிங்காங்கிரசிக்கு அடிபணிந்து அந்த பதவியினை எடுப்பதென்று யாரும் தவறாக நினைக்கக்கூடாது.

மாறாக எமது கிழக்குவாழ் தமிழ் மக்களின் நலனில்; அக்கறை கொண்டே இதனை பொறுப்பெடுக்க இருக்கின்றோம். தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம். அதனை தமிழ்மக்களும் கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் தமிழ்மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரிக்க வேண்டும் என்ற மனோநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் உயிர் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை கட்டி வளர்த்தவர்கள் நாங்கள் ஆனால் தற்போது இந்தநாட்டிலே ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னர் பலர் தற்போது இந்தநாட்டில் இருக்கும் சுமூகமான நிலையை கருத்தில் கொண்டு புலம்பெயர் நாடுகளில் இருந்து (லன்டன், அவுஸ்ரேலியா, கனடா) தேர்தல் கேட்பதற்காக ஆர்வம் காட்டுகின்றார்கள்.
இதனை நாங்கள் வரவேற்கின்றோம் ஆனால் இக்கட்டான சூழலில் கிழக்கு மாகாணத்தில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வளர்த்தவர்களை புறந்தள்ளி விடமுடியாது என்பதனை தமிழ்மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். முன்னை தேர்தலில் லண்டனில் இருந்து வந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று அதனை முஸ்லிங்களின் கரங்களை பலப்படுத்தச் செய்து விட்டு முஸ்லிம்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவிட்டு வாக்களித்த தமிழ் மக்களை நடு வீதியில் விட்டு விட்டு உடனடியாகவே வெளிநாடு சென்ற வரலாறுதான் இருந்து வந்தது. அதனை மீண்டுமொருமுறை செய்ய நாம் இடமளிக்கக்கூடாது.
தேர்தல் முடிந்ததும் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பிவிடுவார்கள் இதுதான் காலாகாலமாக நடைபெற்று வரும் விடயமாகும். நாங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும் அதற்காக அனைத்து தமிழ்மக்களும் ஒற்றுமையாக இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த முன்வர வேண்டும் அப்போதுதான் எமது இலக்கை நோக்கி தொடர்ந்து செல்லமுடியும்.
தற்போது வடமாகாணத்தில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை நிறைவேற்றமானது தகுந்த நேரத்தில் கொண்டுவரப் பட்டிருக்கின்றது. அதனை கிழக்கு மாகாண மக்கள் முழுமையாக வரவேற்பதுடன் எமது கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் வரும்போது அதனையும் எடுப்போம் அதற்கு தமிழ்மக்களாகிய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment