19 Feb 2015

அக்கரைப்பற்றில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை

SHARE
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று நகர் பகுதியில் பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள கடையொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கனணி, இறுவெட்டுக்கள் விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகள் உடைக்கப்பட்டே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கடை உரிமையாளர் கடையை வழமைபோல சம்பவ தினத்தன்று இரவு 9.00 மணியளவில் பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார்.

பின் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் கடையை திறந்தபோது கடையின் பின்கதவு உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த 30 கையடக்க தொலைபேசிகள், 4 கனணி கீபோட்கள், 45 மெமரிசிப்கள், 15 யு எஸ்.பி., மீடியாபிளேயர் 18, இறுவெட்டு ரைற்றர் 4 போன்ற பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை தெரியவந்தது.

இதனை அடுத்து அவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு அக்கரைப்பற்று பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: