14 Feb 2015

சிவில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பு கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச சிவில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பு கூட்டம் வவணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ரி.நசீர் தலைமையில் வெள்ளிக்கிழமை வவுணதீவில் நடைபெற்றது.

பிரதேச சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், இப்பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுவான பிரச்சனைகளை இனங்காணுதல், பொதுமக்களுக்கும் சிவில் பாதுகாப்புக் குழுவுக்குமான உறவை பலப்படுத்தல் போன்ற பலவிடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.





SHARE

Author: verified_user

0 Comments: