20 Feb 2015

மக்களது பங்களிப்பில்லையேல் எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெறமாட்டாது - முதன்மை இலகுபடுத்துனர் த.வசந்தராஜா

SHARE
கடந்த 30 வருடகாலப் போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் மக்களது சமூக பொருளாதார வாழ்வு கணிசமான அளவு பின்தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு பின் தள்ளப்பட்டுள்ள இந்நிலமையை மாற்று முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச திணைக்களங்களும் குறிப்பாக சமூக மட்ட அமைப்புக்களும் இன்றுவரை பாடுபட்டு வருகின்றன. அந்த வகையில்தான் சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனமும் கிராம அபிவிருத்தித் திட்டங்களைத் தீட்டி மக்களது சமூக பொருளாதார நிலமைகளை மேம்படுத்த பாடு பட்டு வருகின்றது

மட்டக்களப்பு செல்வாநகர் கிழக்கு கிராமத்தில் வாழ்வாதாரத்தை மையப்படுத்திய கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை மக்கள் பங்களிப்புடன் உருவாக்கும் ஆரம்ப நிகழ்சித்திட்டத்தின்போது முதன்மை இலகுபடுத்துனர் த.வசந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்.


சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் இணப்பாளர் ஜனாப். எம். எல். எம். றிஸ்லி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அனேகமான திட்டங்கள் காலப்போக்கில் வலுவிழந்து போவதற்கும் தோல்வியில் முடிவதற்கும் மக்களது பங்களிப்பின்மையே பிரதான காரணமாகும். மக்கள் பங்களிப்பின்றிய திட்டங்களோ சரி வேறு எந்த முயற்சிகளோ சரி வெற்றி பெற்ற வரலாறு கிடையாது. எனவே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றி பெறவேண்டுமானால் மக்களது பங்களிப்பினை திட்டமிடலின் ஒவ்வொரு அம்சத்திலும் பெற்றுக் கொண்டாதல் வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் செல்வா நகர் துர்க்கா அமைப்பின் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சிகரம் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் களப்பணியாளர் செல்வி. எஸ்.வினோதா, மாதர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவி. திருமதி. க. சந்திரகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்















SHARE

Author: verified_user

0 Comments: