26 Feb 2015

களுதாவளை கடலில் 7000 கிலோ நெத்தலி மீன் பிடிபட்டுள்ளது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை கடலில் வியாழக்கிழமை (26) மாலை கரை வலை மூலம் சுமார் 7000 கிலோ நெத்தலி மீன் பிடிபட்டுள்ளதாக களுதாவளை மீனவ கூட்டுறவு சங்கத்தின் பெருளாளர் என்.குகதாஸ் கூறினார்.

இந்த 7000 கிலோ மீன்களும், 5 கரைவலையில் பிடிபட்டுள்ளன.

தற்போதைய கால நிலையின் அடிப்படையில் என்றுமில்லாதவாறு மழை பெய்து வருகின்றது. கடந்த வருடங்களில் பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் இவ்வாறு மழை பெய்வது கிடையாது. தற்போது இருள் சூழந்த நிலையும், காணப்படுவதனால் மழையும், பெய்வதனால் கரை வலை மூலம் இவ்வாறு என்றுமில்லாதவாறு நெத்தலி மீன்கன் பிடிபடுகின்றன.

பிடிபட்டுள்ள நெத்தலி மீன் ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்வதுடன் ஏனையவற்றை உப்பிட்டு உலர்த்துவதாகவும், களுதாவளை மீனவ கூட்டுறவு சங்கத்தின் பெருளாளர் என்.குகதாஸ் மேலும் கூறினார்.








SHARE

Author: verified_user

0 Comments: