நாட்டின்
அனைத்துப் பாகங்களிலும் இன்று (11) மிதமான காலநிலை காணப்படுவதுடன் வெயில்
வெட்கைக்கான சாத்தியமே அதிகளவில் காணப்படலாம் என வானிலை அவதான நிலையம்
தெரிவித்துள்ளது.
ஆயினும் அனைத்து பாகங்களிலும் அதிகாலை
வேளையில் பனியுடன் கூடிய குளிரான காலநிலை காணப்படுமென வானிலை அவதான நிலையம்
தெரிவித்துள்ளது. அத்துடன் நுவரெலியா போன்ற பிரதேசங்களில் மேலும் சிறிது
நாட்களுக்கு இப்பனியுடன் சேர்ந்த அதிகுளிரான காலநிலை காணப்படும்.
பிரதான நகரங்களின் காலநிலை
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது
ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 20
செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான
வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் -
மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.
மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக
29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ்பாகையாகவும்
காணப்படும் அதேவேளை சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் காணப்படும். கொழும்பு
மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக்
குறைவான வெப்பநிலை 22 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையில்
பனியுடன் கூடிய காலநிலை காணப்பட்டு பின்னர் மிதமான காலநிலை காணப்படலாம்.
கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு
காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக இரத்தினபுரி
மாவட்டத்தில் 33.1 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா
மாவட்டத்தில் 8.1 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.
ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்
மொறவாக்கை அருவெல பிரதேசத்தில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக 3.4 மி.மீற்றர் பதியப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment