23 Jan 2015

நீரில் மூழ்கி இருவரும் கத்திக்குத்தில் இருவரும் பலி

SHARE
ஏறாவூர் - தாமரங்கேணி பகுதியில் களப்புக்கு அருகில் உள்ள சிறிய நீர்த்தேகத்தில் நீராடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 10 மற்றும் 11 வயதுடைய சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மரண விசாரணை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பியகம - ரக்சபான - மல்வான பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயது இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் புளத்சிங்கள - கலவெல்லாவ பகுதியில் 35 வயது பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளது.

இந்த இரு கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: