14 Jan 2015

இலங்கை புனிதரான ஜோசப்வாஸ் திருநிலைப்படுத்தும் திருப்பலி காலிமுகத்திடலில்

SHARE
இலங்கைப் புனிதராக ஜோசப்வாஸ் அடிகளாரை திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி ஆராதனை இன்று (14) காலை காலி முகத்திடலில் திருத்தந்தை பிரான்ஸினால் நடத்தப்பட்டது.

இலட்சக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்ட இத்திருப்பலியில் கலந்துகொண்டு இறையாசீர் பெற்றனர்.

திருப்பலியை அடுத்து திருத்தந்தை மடு திருத்தலத்தில் நடைபெறவுள்ள திருமணித்தியால தியானத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

திருத்தந்தை நாளை (15) இலங்கையிலிருந்து பிலிப்பைன் நாட்டுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: