(ரெட்ணம்) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு இன்று 12.01 நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருந்த வைத்தியர் திரு.க.விவேகானந்தநாதன் தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர். கல்லூரியில் பயிற்சிபெறும் பயிலுனர்கள் மற்றும் சமூக நலன்புரி அமைப்பின் பணியாளர்கள் என பலர் இந்த இரத்த தானத்தினை வழங்கியிருந்தனர்.
அரச வைத்தியசாலைக்கு ஏழை நோயாளர்கள் தான் வருகின்றனர் என்றும் வழங்குகின்ற இந்த இரத்தம் அவர்களுக்காகத்தான் பயன்படுவதாகவும் பலரின் உயிர்கள் காக்கப்படுகின்றது எனவும் இரத்தம் வழங்குவதனால் அவர் ஒரு சுகதேகியாக வாழ முடியும் எனவும் இவ்வாறான நிறுவனங்கள் கல்வி ஸ்தாபனங்கள் முன்வந்து இச் செயலினைச் செய்வது பாராட்டத்தக்கது எனவும் வருகைதந்த வைத்திய அதிகாரி திரு.க.விவேகானந்தநாதன் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment