திருகோணமலை மாவட்ட செயலகத்தில் 2015 புதுவருட தின நிகழ்வுகள் மாவட்ட மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் ரி. திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா தலைமையில் இன்று (01.01.2015) நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன்
தேசிய கீதமும் பாடப்பட்டது. பின்னர் யுத்தத்தில் தங்களது உயிரை தாய்
நாட்டுக்காக அர்ப்பணித்த படை வீரர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலியும்
செலுத்தப்பட்டது.சகல உத்தியோகத்தர்களும் அரசாங்க அதிபர் முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.
தமிழ் மொழி மூலம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா சத்தியப்பிரகடனத்தை கூற தமிழ் மொழி மூல உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கடந்த வருடத்தில் மாவட்ட செயலகத்தில் செயற்படுகின்ற சகல திணைக்களங்களும் சிறப்பாக செயற்பட்டதாகவும் இதற்கு உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பிரதானமானது என்றும் ஒவ்வொரு உத்தியோகத்தரும் தங்கள் சார்ந்த தொழிலின் சேவைகளை இவ்வருடமும் சிறப்பாக செய்ய வாழ்த்துவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, உதவி அரசாங்க அதிபர் பாத்திய விஜயந்த, திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் உட்பட திணைக்களத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

0 Comments:
Post a Comment