10 Jan 2015

மக்களின் மாற்றத்திற்கு தலை வணங்குகின்றோம். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்

SHARE
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் அளித்துள்ள ஜனநாயக ரீதியிலான தீர்ப்பினை ஜனநாயக விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்றமுறையில் மதிப்பளித்து அத் தீர்ப்பிற்கு தலைவணங்குகின்றோம்.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் இன்று வெள்ளிக் கிழமை (09) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதாவது….
 மாற்றம் வேண்டும் என்ற தேசிய அலையில் தமிழ் மக்களும் உள்வாங்கப்பட்டு சில யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு எம் மக்கள் அளித்துள்ள மாற்றத்திற்கான இத் தீர்ப்பானது எம் மக்கள் எதிர்பார்க்கின்ற அம் மாற்றத்தினை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விலும்இ அபிவிருத்தியிலும் ஏற்பட வேண்டும் என நாமும் விரும்புகின்றோம்.

மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மத்தியில் எம் கட்சிக்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமக்காக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35இ000 ஆயிரம் தமிழ் வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும்இ அவர்களின் தலைமையின்கீழ் தேசிய அரசாங்கத்தின் பிரதமராக பதவிவகிக்க இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அமைய இருக்கின்ற தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அமைச்சுப் பதவிகளை ஏற்று இணக்கப்பாட்டு அரசியலினூடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான சேவையை ஆற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.  என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: