3 Jan 2015

சூர்யாவின் தலைப்பைச் சுட்ட விஜய்

SHARE
இளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி வெளிவந்துள்ளது.

இந்த படத்திற்கு சிம்புதேவன் ‘புலி’ என்ற தலைப்பை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு மாரீசன், கருடா ஆகிய தலைப்புகளும் பரிசீலிக்கப்பட்டதாகவும் இறுதியில் விஜய் மற்றும் சிம்புதேவன் இணைந்து ‘புலி’யை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

‘புலி’ என்ற தலைப்பில் எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே தெலுங்கு மொழியில் பவன்கல்யாண் நடிப்பில் ஒரு திரைப்படம் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் அதே தலைப்பைத்தான் தற்போது விஜய் படத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தலைப்பு பற்றிய முறையான அறிவிப்பு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தெரிகிறது.
விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். நட்டி என்ற நடராஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றார். இந்த படம் வரும் கோடை விடுமுறை தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
SHARE

Author: verified_user

0 Comments: