கிழக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலையான மட்டக்களப்பு புனித மைக்கல்
கல்லூரிக்கு (தேசிய பாடசாலை) கத்தோலிக்க குருவானவர் ஒருவரை அதிபராக
நியமிக்க கோரி கல்லூரிக்கு முன்னால் நேற்று (26) காலை பாரிய ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
பாடசாலையின் பிரதான வாயிலுக்கு முன்னால் ஒன்று திரண்ட பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1892ம் ஆண்டு ஒல்லாந்தர்(டச்சு) ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாசாலையில் சுமார் 3000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
இப்பாடசாலையில் தொடர்ச்சியாக கத்தோலிக்க குருவானவர்களே அதிபராக இருந்து வந்ததுடன் தற்போது குருவானவர் இல்லாத ஒருவரை அதிபராக நியமிக்க நடவடிக்கைககள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசண்ணா ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கே.மாசிலாமணி மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட முக்கியஸ்தர்கள் ஸ்தலத்தில் நடாத்திய பேச்சு வார்த்ததையை அடுத்து அருட்தந்தை கே.ரஜீவன் அடிகளாரை அதிபராக நியமிப்பதென வலய கல்வி பணிப்பாளர் அளித்த வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

0 Comments:
Post a Comment