2 Jan 2015

அதி விசேடமான வெற்றியினை பெற திறந்த மனதுடன் பிரார்த்திக்கிறேன்; பஷீர் சேகுதாவூத்

SHARE
நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் குறிப்­பாக முஸ்­லிம்­க­ளி­னதும் பாது­காப்பு மற்றும் அடைக்­கலம் தொடர்பில் சர்வ வல்­லமை கொண்ட இறை­வ­னுக்கு அடுத்­த­ப­டி­யாக நீங்கள் இருப்­ப­தாக நான் நம்­பு­கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பஷீர் சேகு­தாவூத் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு  அனுப்பி வைத்­துள்ள இரா­ஜி­னாமாக் கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

சிங்­கள மொழி­யிலான அவ­ரது கடி­தத்தின் முழு­மை­யான தமி­ழாக்கம் வரு­மாறு:

உங்கள் முன் ஒரு தீர்க்­க­மான ஜனா­தி­பதித் தேர்தல் உள்ள நிலையில் இரா­ஜி­னாமா கடி­தத்தை சமர்ப்­பிப்­ப­தா­னது சங்­க­ட­மாக உள்­ளது. உங்கள் தலை­மைத்­து­வத்தில் எவ்­வி­த­மான வெறுப்போ மனக் கசப்போ நம்­பிக்­கை­யின்­மையோ எனக்­கில்லை. அவ்­வா­றான விட­யங்­க­ளுக்­காக இந்த இரா­ஜி­னாமா முடிவை நான் எடுக்­க­வில்லை.

எனது அறி­வுக்கு அமைய உங்­களால் கடந்த 9 வரு­டங்கள் இலங்கை தாய் நாட்­டுக்கு செய்த சேவைகள் மிக விசே­ட­மா­னவை. நிறை­வேற்று ஜனா­தி­பதி என்ற ரீதியில் நீங்கள் அதனை செய்­தீர்கள் என்­பது தெளி­வா­ன­தாகும். இது­வரை இருந்த எந்­த­வொரு நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யி­னாலும் முடி­யாமல் போன விசேட செயல் திட்­டத்­தினை நீங்கள் முன்­னெ­டுத்­தீர்கள். அதா­வது 30 வருட கால கொடிய யுத்­தத்தை நீங்கள் முடி­வு­றுத்­தி­னீர்கள்.

நாட்டை நேசிக்கும் பிரஜை என்ற ரீதியில் நீங்கள் நாட்டில் உள்ள அனைத்து பிர­ஜை­க­ளுக்­கி­டை­யிலும் சமா­தா­னத்தை நிலை­நாட்ட எடுத்த  நட­வ­டிக்­கை­களை எனது வாழ்நாள் முழு­வதும் என்னால் மறக்க முடி­யாது.

இந்­நி­லையில் எனது இரா­ஜி­னா­மா­வுக்­கான கார­ணங்கள் வரு­மாறு

01. எனது அர­சியல் கட்­சி­யான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எடுக்கும் தீர்­மா­னங்­க­ளுக்கு நான் உடன்­ப­டு­வ­தாக பொருந்­தி­யுள்­ளமை.

02. முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் நான் கட்­சிக்கு துரோ­கி­யாகி விட்டேன் என்ற கருத்­துக்கள் பர­வு­வதை தடுக்க.

03. நான் அதி­கார பேராசை கொண்­டவன் அல்ல என்­பதை உறுதி செய்ய
04. அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக இருந்த போதும் இந்த தீர்க்­க­மான கால கட்­டத்தில் உங்கள் வெற்­றிக்கு போது­மான வாக்­கு­களை பெற்றுத் தர சந்­தர்ப்பம் இல்­லாமை.

இந்த கார­ணங்­க­ளி­னா­லேயே நான் இரா­ஜி­னாமா செய்­கிறேன். உங்கள் நம்­பிக்­கை­களை தகர்க்கும் ஒரு­வ­னாக என்னை பார்க்க வேண்டாம் என தய­வுடன் வேண்­டு­கிறேன்.

நான் முகம் கொடுத்­துள்ள இந்த இக்­கட்­டான நிலை­மையை நீங்கள் புரிந்து கொள்­வீர்கள் என நான் நம்­பு­கிறேன்.

எவ்­வா­றா­யினும் எனதும் உங்­க­ளதும் மேம்­பாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­யிலும் எந்த வகை­யிலும் நான் சம்­பந்­தப்­ப­ட­மாட்டேன் என்­பதை உறு­தி­யாக கூற விரும்­பு­கிறேன்.

இந்த நிச்­ச­ய­மற்ற சந்­தர்ப்­பத்தில் நாட்டின் அனைத்து மக்­க­ளி­னதும் குறிப்­பாக முஸ்­லிம்­க­ளி­னதும் பாது­காப்பு மற்றும் அடைக்­கலம் தொடர்பில் சர்வ வல்­லமை கொண்ட இறை­வ­னுக்கு அடுத்­த­ப­டி­யாக நீங்கள் இருப்­ப­தாக நான் நம்­பு­கிறேன்.

நீங்கள் அன்று எனக்கு வழங்­கிய வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கவும் இச் சந்­தர்ப்­பத்தை நான் பயன்­ப­டுத்திக் கொள்­கிறேன்.

ஏனெனில் 2013 ஜன­வரி மாதம் எந்­த­வொரு நப­ரி­னதும் சிபா­ரி­சுகள் இன்றி உங்கள் நன்­ம­திப்பின் படி அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்சர் பத­வியை எனக்கு வழங்கும் அள­வுக்கு நீங்கள் கரு­ணை­யாளர். அத்துடன் கடந்த இரு வருட காலப் பகுதியில் எனது அமைச்சை அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல  நீங்கள் வழங்கிய அனுசரணையும் வழிகாட்டல்களையும் நான் மிக நன்றியோடு நோக்குகிறேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வேட்பாளர் என்ற ரீதியில் அதி விசேடமான வெற்றியினை பெற திறந்த மனதுடன் பிரார்த்திக்கிறேன்.(mm)
SHARE

Author: verified_user

0 Comments: