வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரபிரதேசத்தில் பொலிஷாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி விற்பனை செய்ய முற்பட்ட நபர்கள் மற்றும் வாகனங்கள் பொலிஷாரினால் 20ம் திகதி கைது செய்யப்பட்டனர்.
மண்டூர் கணேசபுரத்தில் கடந்த சில காலங்களாக சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மண் வளமுள்ள இடங்களில் இருந்து மண்ணை ஏற்றி பிறிதோரு இடத்தில் சேமித்து வைத்து விற்பனைய செய்வதற்காக டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றும் போது பொலிஷாரினால் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட வாகன சாரதி மற்றும் உதவியாளர்கள் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற பதில் நிதிவான் முன்னிலையில் அஜர் படுத்தப்பட்ட பின்னர் 50000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் சுரங்க மற்றும் கனிப்பொருள் மாவட்ட திணைக்களத்திற்கு மண்ணை கணிப்பீடு செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பொலிஷார் தெரிவித்;தனர்.சுரங்க கனிப்பொருள் அதிகாரிகளின் அறிக்கை சமர்ப்பிற்கும் வரைக்கும் உரிய இடத்திற்கு பொலிஷார் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன்.
0 Comments:
Post a Comment