கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில்
பெய்த கடும் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவில் 4876 கெட்டயர்
விவசாயம் செய்யப்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய
போதனாசியரியர் ஆர் பிரபாகரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை கமநல சேவைகள் பிரிவில் 24
விவசாயக் கண்டங்கள் உள்ளது அதில் இம்முறை 6876 விவசாயக் கண்டங்களில்
விவசாயம் செய்யப்பட்டுள்ள போதிலும் கடந்த வாரம் பெய்த கடும் மழையினால் 4876
கெக்டயர் விவசாயம் செய்யப்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
இது தொடர்பான அறிக்கையினை தங்களது மாவட்ட தலைமைக் காரியாலயத்திற்கு
அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment