12 Jan 2015

கிழக்கு மாகாண சபை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு

SHARE
புதிய ஜனாதிபதிக்கு பல உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவிப்பு!
கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று காலை சபையின் தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி தலைமையில் கூடியது. 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய அமர்வின்போதும் நிறைவேற்றப்படாமல் சபை எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையில் கடமையாற்றுகின்ற அரசாங்க ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகளை உரிய திகதியில் வழங்குவதிலும் சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும் என்பதனால் 20ம் திகதி வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கடைசி தினமாக கருத வேண்டும் என்று இதன்போது பல உறுப்பினர்கள் வேண்டிக்கொண்டார்கள்.

அத்துடன் இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் மாகாண சபை உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே இதன் போது வாக்களித்த கிழக்கு மாகாண மக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: