கல்முனை மாநகர சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை மா
லை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம்
காரியப்பர் தலைமையில் நடைபெற்ற டிசம்பர் மாதத்திற்கான சபை அமர்வில் 2015
ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதல்வரினால் சபையில்
சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டத்தை அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும்
வரவேற்று உரையாற்றியதுடன் முதல்வருக்கு பெரும் பாராட்டையும் தெரிவித்துக்
கொண்டனர்.
முன்னொருபோதும் இல்லாதவாறு மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை
வழங்கப்பட்டு இந்த பட்ஜட் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இதனை வெற்றிகரமாக
அமுல்படுத்துவதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும்
உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
வறிய குடும்பத்தினருக்கு இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை
வழங்குவதற்காக இம்முறை பட்ஜெட்டில் விசேட நிதி ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரு
விளக்கு பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதும்
மற்றும் பல விசேட அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய
விடயமாகும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த பட்ஜெட் விவாதத்தில் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், ஆளும்
முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ்,
ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.எம்.பரக்கத்துல்லா, ஏ.எல்.அமீர், தமிழ் தேசியக்
கூட்டமைப்பு உறுப்பினர்களான ஏ.அமிர்தலிங்கம், எம்.கமலதாசன், ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், சி.எம்.முபீத், ஐக்கிய
தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.எம்.நபார் ஆகியோர் உரையாற்றியதுடன் அனைத்து
உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர்; இந்த பட்ஜெட் ஏகமனதாக
நிறைவேற்றப்பட்டமை குறித்து தான் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாகவும் அதற்காக
உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது மனம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதாகவும்
குறிப்பிட்டார்(mm)
0 Comments:
Post a Comment