31 Dec 2014

உலகமெங்கும் ஒரே தினத்தில் வெளியாகும் இலங்கை கலைஞர்களின் 'ஊதிட்டாயா சங்கு' பாடல்

SHARE
லண்டன் ‘தீபம் தொலைக்காட்சியின் அனுசரணையில் எதிர்வரும் புதுவருட தினத்தில் உலகமெங்கும் வெளியாகிறது ‘ஊதிட்டாயா சங்கு’ என்ற இலங்கை கலைஞர்களின் பாடல்.
‘டயமன்ட், ‘புன்னகை’ போன்ற இசைத் தொகுப்புக்களை இலங்கையின் இசைத்துறைக்கு தந்திருக்கும் இலங்கையின் முன்னணி இசையமைப்பாளர் டிரோன் பெர்ணான்டோவின் இசையமைப்பிலும், தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜிப்ரான், வல்லவன், மிதுன் ஈஸ்வர் போன்ற இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்து அனுபவம் பெற்ற நம் நாட்டின் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மினின் வரிகளிலும் வெளிவரும் இப்பாடலை லண்டனில் வசித்துவரும் எம்நாட்டு கலைஞர் எஸ்.ஜீ.சான் மெட்டமைத்து பாடியுள்ளார். 
இலங்கை, இந்தியா, லண்டன் போன்ற நாடுகளில் இந்திய கலைஞர்களோடு பல மேடைகளில் இணைந்து பாடி அனுபவம் பெற்ற எஸ்.ஜீ.சான். ராஜ் டிவியின் ‘ராஜகீதம்’ நிகழ்ச்சியின் மூலம் பாடகராக அறிமுகமானவர். 2010ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற Rock & Rock Arts Institute வருடாந்த கலை நிகழ்வில், பாடல் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டதோடு லண்டனில் இடம்பெற்ற 'கானக்குயில்' பாடல் போட்டித் தொடரிலும் முதலிடம் பெற்றுக்கொண்டவர்.
இத்தகைய திறமை மிகு இலங்கை கலைஞர்களின் உழைப்பில் புத்தாண்டு பரிசாக வெளிவரும் இப்பாடல் இலங்கை ,இந்தியா, பிரித்தானியா , மலேசியா ,சிங்கப்பூர் , அவுஸ்திரேலியா ,ஜேர்மன் போன்ற நாடுகளில் உள்ள 20 இற்கும் மேற்பட்ட பிரபலமான வானொலிகளிலும் 30 இற்கும் மேற்பட்ட இணையத்தள வானொலிகளிலும் ஒரே தினத்தில் வெளியிடப்படவுள்ளது. 
இலங்கையரின் பாடல் ஒன்று உலகமெங்கும் ஒரே தினத்தில் அதிகமான வானொலிகள் மூலம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இலங்கையில் சூரியன் FM, சக்தி FM, தமிழ் FM ஆகியவற்றில் பாடல் வெளியாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: