(HT)
EREEDO நிறுவன தொழிற்பயிற்சி நிலையத்தினால் (05)ஆசிரியர் தின நிகழ்வுகள் அதன் பணிப்பாளர் மயுரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்திரனாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் அவர்களும் விசேட அதிதிகளாக கிறிஸ்தவ மத போதகர் திவ்யகுமார், மட்டக்களப்பு மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன், செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் பிரமுகர் பிறேம்குமார் போன்ற பிரமுகர்களும் தொழிற் பயிற்சி நிலையத்தின் பயிற்சியாளர்களும் பயிற்றுவிப்பாளர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்றுவிப்பாளர்கள் அதிதிகள் என பலர் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments:
Post a Comment