25 Nov 2014

கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்தீன் ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

SHARE
கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்தீன் ஆகியோர் எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதானது,
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிசாம் காரியப்பர் தலைமையில் இன்று பிற்பகல் சபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வெஸ்டர் றியாஸ் கல்முனையிலுள்ள வீதி ஒன்றுக்கு பெயர் சூட்டும் பிரேரணையை சபையில் மும்மொழிந்துள்ளார்.
இப்பிரேரணை தொடர்பாக ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர் றியாஸூக்குமிடைய பெரும் வாக்கு வாதம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாக்கு வாதம் முற்றியதனால் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ. நிசார்தீன் மற்றும் றியாஸூக்குமிடையே சபையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இக்கைலப்பில் இருசாரரும் சரமாறியாக ஆள்ளாள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலினால் காயமடைந்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்தீன் ஆகியோர் சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதல்வரினால் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: