25 Nov 2014

அச்சமில்லாமல் இறைவனை அணுகுவதற்கு உரிய மார்க்கம் சாயி மார்க்கம்தான் - எம்.தயாபரன்

SHARE
அச்சமில்லாமல் இறைவனை  அணுகுவதற்கா உரிமையினைப் பெற்றுக்கொள்ளத் தகுதியான மார்க்கமே சாயிமார்க்கமென நாம் அச்சமின்றிக் கூறமுடியும் சீரடியில் ஆரம்பித்த பயணம் தற்போது சர்வதேசத்தினையும் தன்பால் ஈர்த்துள்ளது என்றால் அதற்கு அடிப்படையாக உள்ளது அச்சமின்றி இறைவனை அடையக் கூடிய தத்துவமாகும். என களுவாஞ்சிகுடி சாயி மன்றத்தின் உபதலைவரும் பிரதேச செயலாருமாகிய எம்.தயாபரன் தெரிவித்துள்ளார்.

பகவான் சத்திய சாயி பாபாவின் 89வது ஜனன தினம் களுவாஞ்சிகுடி சாயி நிலையத்தில் ஞாயிற்றுக் கிழமை (23)  இடம் பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு சாயி பக்தர்கள் மத்தில் சிறப்பு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்….. ஓவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சின்னம், ஒருகாலாசாரம், ஒருவழக்கம், என வேறுபட்டுப் போயுள்ள உலகில் தற்போது இனம் மதம் மொழி காலசாரம் என்ற வெறுபட்ட பன்மைத் தன்மைகளை உடைத்தெறிந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒருமைத்தன்மையினை நிலைநாட்டியுள்ளதே சாயி மார்க்கமாகும் “ஏகம்சத்” என்ற வேத வாக்கியத்தின் வடிவமே இகுவாகும்.

அனைத்து தரப்பினரையும் ஒன்று படுத்தக்கூடிய இந்த அற்புதமான சக்தியினை பாபா மிக இலகுவாக வெளிப்படுத்தியுள்ளார். அதுதான் அன்பு என்ற மூன்றெழுத்து. மூவுலகினையும் கட்டிப் போடக்கூடிய சக்தி இந்த மூன்றெழுத்திற்கு உண்டு என்பதனை உணர்த்த பகவான் அதையே நமக்கு வழிகாட்டியாக தந்திருக்கின்றார். “அன்பே சிவம்” எனவும் கூறி அதனை அனுபவித்துக் கிடைக்கின்ற உணவுதான் ஆன்மீகம் மனிதன் எனும் மரத்தின் வேராகத் திகழ்வது மனிதத் தன்மை. மனிதத் தன்மையின் அடிப்படையே அன்பு என்ற ஐPவ ஊற்றுத்தான் ஆன்மீகத்தின் ஓருகண்ணாகவும் சேவையினை இன்னொருகண்ணாகவும் கொண்டு உலகினை நோக்குகின்றது சாயிமார்க்கமாகும்.

இன, மத, மொழி,  வேறுபாடின்றி ஏழை, பணக்காறன். என்ற பேதமின்றி சேவைகளை வழங்கி மகிழ்ந்து கொண்டிருப்பவர் பாபா இந்த பாபா வின் அவதார தினத்திலே நாம் கூறும் செய்தி என்ன என்பதே முக்கியமானதாகும். கடமை, கடமை, கடமை, இது ஒன்றே அந்த செய்தியாகும். பகவான் எமக்கென்று கடமைகளை ஒழுங்குபடுத்தியிருக்கின்றான்.

சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, என சர்வமதத் தன்மையை போதித்துள்ளார். இதுவே எம் ஒவ்வெருவரின் வாழ்ககை முறையாகும். இதிலிருந்து விலகிவிடாது அக்கியப்படுத்துவத
னூடாகவே எமது பாதையில் நாம் செல்ல வேண்டும். ஒவ்வொரு கணமும் இதனை நினைவு படுத்திக் கொள்பவனே உண்மையான சாயிபக்தனாக முடியும். எனத் தெரிவித்தார்

SHARE

Author: verified_user

0 Comments: