25 Nov 2014

இலங்கையில் அதிகூடிய உயரமுடைய வாயிற் கோபுர விநாயகர் சிலை

SHARE
வாயிற் கோபுரத்துடன் கூடிய விநாயகர் சிலை கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஆலயம் ஒன்றில் வாயிற் கோபுரத்துடன் கூடிய விநாயகர் சிலை அமைவதுவும், இலங்கையிலேயே அதிகூடிய உயரமுடைய இதுவே முதலாவது ஆலயம்  எனவும், இவ்வாலய நிருவாகசபைத் தலைர் ஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராசா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் சைவ ஆலயங்களில் எங்கும் இல்லாத வகையில் இவ்வாலயத்தில் அமைக்கப் பட்டுவரும் வாயிற் கோபுரமானது 64 அடி உயரங் கொண்டதாகும். 40 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப் பட்டுவரும் இவ் வாயிற்கோபுர சிலையின் நிர்மானிப்பு பணிகள் 2013 டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.  இதன் நிர்மானப் பணிகள் எதிர் வரும் 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் நிறைவடையவுள்ளதாக ஆலய நிர்வாகத்தின் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக  ஆலயத்தின் தலைவர் த.விமலானந்தராசா தெரிவிக்கையில் இது தென்னிந்திய கலைமரபுப்படி அமைக்கப்படும் சிலைவடிவிலான வாயிற் கோபுரமாகும். இக் கோபுரத்தில் வடிக்கப்படும் விநாயகர் வடிவமானது வலம்புரி விநாயகர் வடிவம் என அவர்  தெரிவித்ததோடு இதே போன்ற அமைப்பில் ஆஞ்சனேயர் ஆலயம் பெங்களுரில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: