ஸ்ரீ லங்கா யூத் தொண்டர் அடிப்படையிலான கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் வீடமைப்புப் பணிக்கான அடிக்கல் நடும் வைபவம் சந்திவெளியில் நேற்று வெள்ளிக்கிழமை (21) பிரதேச சம்மேளன தலைவர் கோ.தினேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மிகவும் வறிய நிலையில் காணப்படும் குடும்பத்திற்காக வழங்கப்படும் இத்திட்டமானது இவ்வருடம் சந்திவெளியை சேர்ந்த ச.தமேயந்தினி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வறிய நிலையில் வாழ்க்கையை கொண்டு நடாத்தும் கனவனை இழந்த ராஜேஸ்வரிக்கு மூன்று பெண் பிள்ளைகள். தற்பொழுது தனது மகளின் வீட்டில் வசித்து வரும் நிலையில் இவ்வீட்டுத்திட்டம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் அடிக்கல் நடும் வைபவத்தில் பிரதம அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜே.கலாராணி, கிரான் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.விந்தியன் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் வை.குலேந்திரகுமார், இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை நேற்றயதினம், சந்திவெளி பாலையடித்தோணாவிலுள்ள சந்திரசேகரம் சியாமளா என்பவருக்கு ஸ்ரீ லங்கா யூத் தொண்டர் அடிப்படையிலான கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அடிக்கல் நடும் வைபவத்தில் கலந்துகொண்ட அதிதிகளுடன் பாலையடித்தோணா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.ரதன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
0 Comments:
Post a Comment