(மட்டு.சுரேஸ்)
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் 114 சிங்களப் பொலிஸார் தமிழ் மொழியை கற்று வெளியேறுவதாக கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன தினேஸ் தெரிவித்தார். இப்பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(03) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது
கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் இருந்து தமிழ் மொழிப் பயிற்சியை முடித்து வெளியேறும் 7 ஆவது சிங்கள மொழி மூலப் பொலிஸாரைக் கொண்ட அணி இதுவாகும்.இவர்களுக்கு ஆறுமாத காலம் வதிவிடத்துடன் கூடியதாக தமிழ் மொழித் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனூடாக சிங்கள மொழி பேசும் பொலிஸார் தமிழ் மொழியில் சரளமாக எழுத வாசிக்க பேசக் கற்றுக் கொள்கின்றனர்.
தமிழ் மொழியைக் கற்று வெளியேறும் 114 சிங்களப் பொலிஸாரில் 8 பேர் சிங்கள பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களாவர்'என்றார்.
0 Comments:
Post a Comment