16 Feb 2014

களுவாஞ்சிகுடி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

SHARE
 (கமல்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்ட களுவாஞ்சிகுடி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் கடந்த 13 அன்று பிற்பகல் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கிராமத் தலைவர் அ.கந்தவேள் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சகுணன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர் மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் இதில் கலந்த சிறப்பித்தனர்.

களுவாஞ்சிகுடி கிராம அபிவிருதி தொடர்பான இக்ககூட்டத்தின்போது களுவாஞ்சிகுடி கிராமத்தினைப் பிரநிதிதித்துவப் படுத்தி காணப்படுகின்ற வீதிகள் புணரமைப்பு, தபாலகத்தனைப் புணரமைப்புச் செய்தல், பொது விளையாட்டு மைதானத்தினைப் பணரமைப்புச் செய்தல், பொதுச்சந்தைத் தொகுதியினை அபிவிருத்தி செய்தல், பாடசாலைகளை புணருத்தாரணம் செய்தல் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினை நகரசபையாக தரமுயர்துதல் போன்ற கோரிக்கைகள் நேற்றயத்தினம் பொதுமக்களினால் மேற்படி பிரதியமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.

மக்களின் இக்கோரிக்கைகளினை படிப்படியாக நிவர்த்தி செய்து தருவதாக இதன்போது மீழ்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்தி முரளிதரன் உறுதியளித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: