28 Jan 2014

சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி அதனூடக தமிழ் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

SHARE
  (வரதன்)

தமிழீழ விடுதலைப் புலிகள்  இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் யுத்தத்தை நிறைவு செய்து தந்திரோபாயமாக மாற்றத்தை ஏற்படுத்துமாறும் அரசியல் தீர்வொன்றுக்கு வருமாறும் நான் ஆலோசனை வழங்கினேன். ஆனால் எனது ஆலோசனையை அவர் கேட்கவில்லை' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.

மட்டக்களப்பு நொச்சிமுனை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் செயற்பாட்டு அமைப்புக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். 
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்


சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி அதனூடக தமிழ் மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். களத்தில் யுத்தத்தை கண்டவன் என்ற வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் உயிரிழப்புக்களையும் அங்கவீனங்களையும் பார்த்தவன் நான்.

இந்நிலையில் தமிழ் இளைஞர்களையும்இ தமிழ் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் நான் மாற்றத்தை ஏற்படுத்தினேன். எனது உடம்பில் யுத்தத்தினால் ஏற்பட்ட 17 காயங்கள் உள்ளன. 
கூட்டமைப்புக்கு வாக்களித்து எந்தவொரு பிரயோசனத்தையும் தமிழ் மக்கள் அடையவில்லை. கிளிநொச்சியிலுள்ள இராணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பானத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்.
இராணைமடு குளத்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பாவிட்டால் யாழ்ப்பாணத்தில் பல கிணறுகள் உப்பாகிவிடும். இதனால் அந்த மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும்.  தமிழ் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பாத நிலையை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் எதிர்ப்பு நடவடிக்கையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று உன்னிச்சை குளத்திலிருந்து தண்ணீர் கொடுப்பதுபோல அம்பாறை மாவட்டத்தின் கொண்டவெட்டுவான் குளத்தினையும் அபிவிருத்தி செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆனால் அந்த குளத்திலிருந்து தண்ணீர் கொடுப்பதை அங்குள்ள சிங்கள மக்களோ முஸ்லிம் மக்களோ எதிர்க்கவில்லை.

தமிழ் மக்கள் இனியாவது நிலைமையை புரிந்து செய்றபட வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்ந்து வாக்களிப்பதனால் தமிழ் மக்களின் இருப்பு இன்னும் குறைய வாய்ப்புண்டு.
இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் தமிழ் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்திகளை கண்டு வருகின்றன. வீதிகள்இ பாலங்கள்இ பாடசாலைகள் என பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மகளிர் சங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாவீதம் மாவட்டத்திலுள்ள 300 மகளிர் சங்கங்களுக்கு 300 இலட்சம் ரூபாய்களை நிதியொதுக்கீடு செய்யவுள்ளேன். எனத் தெரிவித்த அவர் 

பெண்களின் வாழ்வாதாரம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதைவைகளின் வாழ்வாதரம் அவர்களின் சுயதொழில் என்பவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: