மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலய மஹோற்சவத்துக்கான ஆன்மீகப் பாதயாத்திரை இறுதி நாளான ஐந்தாம் நாள் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை வாகரை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து மாலை 3.30 மணிக்கு வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயத்தை நோக்கி சென்றது.
இந்நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், கிழக்கு இந்து ஒன்றிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றார்.
பாதயாத்திரையானது கடந்த வியாழக்கிழமை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஐந்து நாட்களாக மண்டூர், எருவில், குறுமன்வெளி, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு, தாளங்குடா, ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி, நாவற்குடா, மட்டக்களப்பு, ஊறணி, தன்னாமுனை, ஆறுமுகத்தான்குடியிருப்பு, மயிலம்பாவெளி, ஏறாவூர், செங்கலடி, கொம்மாதுறை, வந்தாறுமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, மயிலங்கரச்சை, காயான்கேணி. மாங்கேணி, பனிச்சங்கேணி, வாகரை, கண்டிலடி, பால்சேனை, புச்சாக்கேணி, கதிரவெளி ஆகிய இடங்களின் பிரதான வீதியில் உள்ள ஆலயங்களை தரிசித்தபடி பாதயாத்திரை இடம்பெற்றது.
இப்பாதயாத்திரையில் கதிரவெளி அறநெறிப் பாடசாலை மாணவர்கள், இந்து இளைஞர் மன்றத்தினரின் பஜனை வழிபாட்டுடன் பாதயாத்திரை வெருகல் சித்திரவேலாயுதர் ஆலயம் வரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பேரவை பொருளாளர் நா.புவனசுந்தரம், கிழக்கு இந்து ஒன்றிய பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசன், பேரவை உறுப்பினர்களான ச.ஜெயலவன், சொ.ரதன், ந.குகதர்சன், க.சந்திரகாந்த், சே.நிமல்ராஜ், எஸ்.ரூபன் மற்றும் பல உறுப்பினர்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரையுமான யாத்திரையில் கலந்து கொண்டனர்

0 Comments:
Post a Comment