19 Sept 2012

அரசியலில் முதன் முதல் காலடி

SHARE
அரசியலில் முதன் முதல் காலடியெடுத்து வைத்து அரசியலில் கன்னிப்பயணத்தில் இறங்கிய எனக்கு எனதினிய மட்டக்களப்பு வாழ் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் பேட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மார்கண்டு நடராசா அவர்கள் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்.
உண்மையிலேயே மட்டக்களப்பு தழிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்ட கசப்பான விடயங்களை தங்களது அடிமனதில் போட்டு தற்போது மெல்ல மெல்ல அரசியல் நீரோட்டத்தில் விழிப்படைந்து வருகின்றார்கள்.
மட்டக்ளப்பு மக்கள் கடந்த 60 வருடகாலமாக பற்பல இடர்களைச் சந்தித்தவர்கள் பெறுமதி மிக்க சொத்துக்கள் விலை மதிக்க முடியாத உயிர்களையும் இழந்தும்கூட இன்றுவரை அரசியல் தீர் வொன்று கிடைக்காத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த கிழக்ணக மாகாணசபத் தேர்தலில் நாம் பற்பல சவால்களை எதிர்கொண்டோம் அதுபோல் எனதினிய தழிழ் உறவுகளும் பாரிய பிரச்சனைகளை இத்தேர்தலில் சந்தித்துள்ளர்கள்.
இவ்வாறான சவால்களின் மத்தியிலும் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கழித்து முதன்முதலாக அசசியலில் இறங்கிய என்னை மாகாண மன்றிற்கு அனுப்பியிருக்கும் மட்டக்களப்பு வாழ் தழிழ் சமூகத்திற்கும் எனது கருத்துக்களை வெளிக்கொணர்ந்த உடகங்களுக்கும் எனது உளமறிந்த நன்னியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்பவனாகவும் சர்வதேசத்தில் எம்மினத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பவும் என்றென்றும் கடமைப் பட்டவனாகத் திகழ்வேன் எனவும் கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள மார்க்கண்டு நடராசா மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: