26 Jan 2024

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் நியமன வழிபாடு.

SHARE

இலங்கை மெதடிஸ்த திருச்சபை வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவைத்தலைவர் நியமன வழிபாடு.

இலங்கை மண்ணில் மெதடிஸ்த திருச்சபை 210 வது ஆண்டில் கால்பதிக்கும் இத்தருணத்தில், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் 14வது வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவை தலைவராக அருள்திரு. அருளானந்தம் சாமுவேல் சுபேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட உள்ளார். இவர் 20.12.1971 இல் யாழ்ப்பாணம் கரவெட்டி மத்தியில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை யா.திருஇருதயக்கல்லூரியிலும் இடைநிலை கல்வியை யா.ஹாட்லிக் கல்லூரியிலும், அதனைத்தொடர்ந்து யா.யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்றார்.

இவர் 1994ம் ஆண்டில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வருடாந்த திருப்பேரவை கூட்டத் தொடரில் இறைபணிக்காக தம்மை அர்ப்பணித்து ஏற்றுக்கொள்ளப்பட்டார். இவர் 1995ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டுவரை தனது இறையியல் கல்வியை இலங்கை இறையியல்கல்லூரி பிலிமத்தலாவையில் குருத்துவமாணவனாக பயின்றார்.

மேலும் இவர் 1999ம் ஆண்டு முதல் மன்னார், வன்னித்திருப்பணி, ஜுவோதயம், கோட்டமுனை, கல்லாறு,செங்கலடி,வாழைச்சேனை, புளியந்தீவு ஆகிய சேகரங்களில் முகாமைக் குருவானவராக பணியாற்றியுள்ளார். அத்தோடு 2011 ம் ஆண்டில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவை செயலாளராக தெரிவுசெய்யப்பட்டு 2014ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

கடந்த 2022ம் ஆண்டு இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வருடாந்த திருப்பேரவை கூட்டத்தொடரில் 2024 ஆம் ஆண்டுக்கான வடக்கு - கிழக்கு திருமாவட்ட அவை தலைவராக தெரிவு செய்யப்பட்டு தை மாதம் 2024ம் ஆண்டு முதல் திருமாவட்ட அவை தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.

இவர் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருமாவட்ட அவை தலைவராக நியமனம் பெறும் வழிபாடு எதிர்வரும் 28.01.2024 ஞாயிறு காலை 10.00 மணிக்கு புளியந்தீவு மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி வழிபாடானது இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவை தலைவர் அருள்திரு.டப்ளியு.பி.எபநேசர் ஜோசப் அவர்களினால் நடாத்தப்படும்.

 


 

SHARE

Author: verified_user

0 Comments: