29 Jan 2024

போக்குவரத்து செய்ய முடியாதஅளவிற்கு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீதிக்கட்டமைப்பு.

SHARE

போக்குவரத்து செய்ய முடியாதஅளவிற்கு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீதிக்கட்டமைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழைகாரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளத்தினால் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் ஆனைகட்டியவெளி பலாச்சோலை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான வீதி முற்றாக பாதிக்கப்பட்டு போக்குவரத்துச் செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் ஆனைகட்டியவெளி பலாச்சோலை ஆகிய பகுதிகளை இணைக்கும் பிரதான பாலத்தின் இருமருங்கிலும் வெள்ளத்தனால் பாரிய சேதம் ஏற்பட்டள்ளது.

இதனால் அப்பகுதிக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சேவையும் கடந்த 20 நாட்களாக தடைப்பட்டுள்ளதாகவும், உடன் சம்மந்தப்பட்வர்கள் வீதிக்கட்டமைப்பை புனரமைப்பு செய்துதருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

இந்நிலையில் இவ்விடையம் குறிது கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கவனத்திற்கும் அப்பகுதி கிராமமட்ட பொதுஅமைப்புக்கள் கொண்டு சென்றதையடுத்து இராஜாங்க அமைச்சரின் ஆலேசனைக்கமைவாக அவரினன் பிரதிநிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை(28.01.2024) பிற்பகல் விஜயம் செய்து நிலமையினை பார்யிட்டு, அவ்விடத்திலிருந்தே உரிய அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ளத்தினால் பழுதடைந்துள்ள இவ்வீதியை உடன் புனரமைப்பு செய்யுமாறு அதிகரிகளுக்கு தெரிவித்தார்.

எனவே பழுதடைந்துள்ள இவ்வீதி உடன் புனரமைப்புச் செய்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இதன்போது பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: