29 Nov 2023

கொழும்பு லயன்ஸ் கழகத்தின் வுளு சப்பிரி அமைப்பினால் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.

SHARE

கொழும்பு லயன்ஸ் கழகத்தின் வுளு சப்பிரி அமைப்பினால்  பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு.

கொழும்பு லயன்ஸ் கழகத்தின் வுளு சப்பிரி அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை பிரதேசங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது 40வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரீசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, கண்பரிசீலனை செய்து  500 பேருக்கு அவ்விடத்திலேயே மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், இளைஞர் யுவதிகளுக்கு போதைபொருள் பாவனைகளிலிருந்து விடுபடுவதற்குரிய விழிப்பூட்டும் நிகழ்வும்குடிநீர் தாங்கிகள் மற்றும் யானை பாதுகாப்புக்குரிய வீதி மின்விளக்குகளும் வழங்கப்பட்டன.

இதன்போது கலந்து கொண்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் அவ்வமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மேற்படி அமைப்பிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வேலைத்திட்டம் இடம்பெற்றது.

இதன்போது போரதீவுப்பற்று உதவி பிரதேச செயலாளர் துலாஞ்சனன், லயன்ஸ் கழகத்தின் வுளு சப்பிரி நிறுவணத்தின் செயலாளர் ராமச்சந்திரன் பொருளாளர் சிவானந்திரன் இத்திட்டத்தின் தலைவர் கோபிநாத் உபதலைவர் தேவராஜ் மற்றும் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் பொதுமக்களென பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
















SHARE

Author: verified_user

0 Comments: