9 May 2023

ஆனந்தகிரி அறப்பணி சபையினால் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ் - சிங்கள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

SHARE

ஆனந்தகிரி அறப்பணி சபையினால் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ் - சிங்கள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.

கோறளைப்பற்று, வாழைச்சேனை  பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி  அறப்பணி சபையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் ஸ்ரீ புத்த  ஜயந்தி விகாரையில் வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி  இனநல்லுறவை கட்டியெழுப்பும் முகமாக வசதிகுறைந்த ஒருதொகுதி தமிழ், சிங்கள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (06.05.2023) ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கோறனைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம், கலாசார உத்தியோகத்தர் கே.எஸ்.ஆர். சிவகுமார், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் .பிருந்தாபன்  உள்ளிட்டோரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

 இந்நிகழ்வில் ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி அத்துல அலங்கார தேரர் அவர்களின் மத அனுஸ்டானங்கள், ஆசியுரையினை தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், உபசரிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இயற்கையை நேசிப்போம் ஆளுக்கொரு மரம் நடுவோம் எனும் தெனிப்பொருளில் ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையிலும், வாழைச்சேனை பிரதேச செயலகத்திலும் பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

ஆனந்தகிரி அறப்பணி சபையானது மட்டக்களப்பு மாவட்டம் முழுவதுமாக தனது பணியை விரிவுபடுத்தி மாதம் ஒரு செயல்திட்டம் எனும் அடிப்படையில்  கல்வி அபிவிருத்திவறிய குடும்பங்களின் பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, இயற்கையை நேசித்தல், இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள், கலை கலாசார நிகழ்வுகளை நடாத்துதல், இன நல்லுறவை பேணுதல் எனும் செயல்திட்டங்களை மையப்படுத்தி இன, மத பேதமற்ற வகையில் பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

























SHARE

Author: verified_user

0 Comments: