மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று புதன்கிழமை (09.11.2022) பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில், பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக இது ஐந்தாவது தடவையாக நடைபெற்ற இரத்த தான நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment