1 Nov 2022

வெற்றிக்கான மென்திறன்கள் சுய ஊக்குவிப்பு அமர்வு.

SHARE

வெற்றிக்கான மென்திறன்கள் சுய ஊக்குவிப்பு அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குபட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையின் உயர் வகுப்பு மாணவர்களுக்குவெற்றிக்கான மென்திறன்கள் சுய ஊக்குவிப்பு செயலமர்வுஒன்று வெள்ளிக்கிழமை(28) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் .சத்தியமோகன் தலைமையில் பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே.ரி.பி. எனும் நிபுணத்துவ ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரபல வளவாளர் துரைராஜா பிரஷாந்தன்  அவர்கள் இதன்போது கலந்து கொண்டு மாணவர்கள் தற்காலத்தில் எதிர் கொள்ளும் சவால்கள், வெற்றிக்கான வழிவகைகள், சவால்களை எதிர்கொள்ளும் வழிவகைகள், தடைகளைக் கடந்து கற்றல், தடைகளைத் தாண்டும் நுட்பங்கள், மற்றும் தலைமைத்துவம், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் இதன்போது மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இதன்போது முன்னாள் வலயக்கல்வில் பணிப்பாளரும் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தலைவருமான கே.பாஸ்கரன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் ஆர்.ஞானசேகரன், மற்றும் அதன் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

கே.ரி.பி. எனும் நிபுணத்துவ ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனமானது, இலங்கை மத்திய வங்கி உட்பட மற்றும்பல முன்னணி நிறுவனங்களுக்கும், திணைக்களங்களுக்கும், தொழில் வாண்மை தொடர்பான பயிற்சிகளை வழங்கி வருகின்றது. இந்நிலையியில் இவ்வமைப்பு இன்றயத்தினம் இலவசமாக மாணவர்களுக்கு இப்பயிற்சியை வழங்கியிருந்தமை விசேட அம்சமாகும்.












SHARE

Author: verified_user

0 Comments: