“காலநிலையை கையாளும்
செயலகம்"ஜனாபதியின் முடிவு சாதுர்யமானது.
காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கதென, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கோப் 27 காலநிலை மாநாடு
நவம்பரில் எகிப்தில் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையில்
இச்செயலகத்தை நிறுவ தீர்மானித்துள்ளமை தூரதிருஷ்டியுள்ள நடவடிக்கை என்றும் அமைச்சர்
நஸீர்/அஹமட் வரவேற்றுள்ளதாக திங்கட்கிழமை அமைச்சரின்
ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குப்பிடப்பட்டுள்ளது
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது….
காலநிலை மாற்றத்தால்
உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறது. இதனால் ஏற்படும் அழிவுகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள
வல்லரசுகள் முயல்கின்றன. இந்த முயற்சிகளை முன்னுதாரணமாகக் கொண்டுதான், இலங்கையிலும் காலநிலை மாற்றம் தொடர்பான
செயலகம் நிறுவப்பட உள்ளது.சூழலைப்பாதுகாத்து மக்களை சுகதேகிகளாக வாழ வைக்கும் ஜனாதிபதியின்
முடிவு சாலச்சிறந்ததும், காலத்துக்கேற்றதுமாகும்.
மேலும், காலநிலை மாற்றம்
தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் நிறுவப்படவுள்ளதுடன், இம்மாற்றங்களை கையாள்வதற்கான
சட்ட மூலமும் தயாரிக்கப்படவுள்ளது. இதுபோன்ற ஜனாதிபதியின் முன்னோடி வியூகங்கள் காலநிலையால்
பாதிக்கப்படும் எமது நாட்டையும் பாதுகாக்க உதவும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் நம்பிக்கை
தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment