8 Oct 2022

செந்தமிழ் மந்திரம் ஒலிக்க குடும்பிமலையில் மகா யாக உற்சம்.

SHARE

செந்தமிழ் மந்திரம் ஒலிக்க குடும்பிமலையில் மகா யாக உற்சம்.

வரலாற்று தொன்மைவாய்ந்த குடும்பிமலை ஸ்ரீ குமரன் ஆலயத்தின் உற்சவகால பாதயாத்திரையும் வருடாந்த அலங்கார உற்சவம்

செந்தமிழ் மந்திரம் ஒலிக்க குடும்பிமலையில் மகா யாக உற்சவப் பெருவிழா வியாழக்கிழமை (06) நிறைவடைந்தது. வருடாந்தாம் குமரன் ஆலயத்திற்கான பாதயாத்திரை மரபுவழியாக முருகப்பெருமானின் ஆதியிருப்பிடமான வரலாற்று புகழ்பெற்ற சித்தாண்டி சித்திர வேலாயுத கோவிலில் இடம்பெறும் விசேட பூசையுடன் ஆரம்பமாகும்,

 

இவ்வேளை செவ்வாய்கிழமை  (04) ஆரம்பமான பாதயாத்திரைக்கு பல நூற்றுக்கணக்கான அடியார்களுடன் பாரம்பரியமாக ஆலயத்திலிருந்து ஆதிவேல் மற்றும் தேன் மற்றும் தினைமா கோவில் சித்தாண்டி முருகன் கோவில் வன்னிமை தலைமையில் வழங்கிவைக்கப்பட்டதும் பாதயாத்திரை ஆரம்பமானது.

 

உற்சவகால பாதயாத்திரை சித்தாண்டி முச்சந்தி விநாயகரை வழிபட்டதும் சந்திவெளி மற்றும் கிரான் பிள்ளையார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களை சென்றடைந்து நண்பகல் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது, பாதயாத்திரையில் ஈடுபட்ட அடியார்களுக்கு  பலர் முன்வந்து தாகசாந்தி மற்றும் நண்பகல் அன்னதானம் என்பன வழங்கப்பட்டது.

 

பாதயாத்திரியர்கள் முதல் நாள் பள்ளத்துச்சேனை மகா விஸ்ணு ஆலயத்தை சென்றடைந்ததுடன் அன்றிரவு  ஆலயத்தில் விசேட பூசை மற்றும் பஜனை என்பன இடம்பெற்றது. ஆலய உற்சவகால இரண்டாம் நாளுக்குரிய  பாதயாத்திரை பள்ளத்துச்சேனையிலிருந்து  காலை ஆரம்பமாகி குடும்பிமலை குமரன் ஆலயத்தை வந்தடைந்ததும் மலையடி விநாயகர் பூசை இடம்பெற்றதுடன் ஆடியார்கள் கண்ணகி அம்மனை வழிபட்டு ஆதிவேலுடன் அரோகரா கோசத்துடன் நூற்றுக்கணக்கான அடியார்கள் மலையேறினர்.

 

குடும்பிமலை குமரன் சந்நிதியை சென்றடைந்ததும் ஆடியார்களினால் பக்தியமானது குமரன் மலையுச்சி. ஆதிவேல் கொண்டுவரப்பட்டுவிசேட பூசைகளுடன் பக்தி பஜனை பாடல்கள் இடம்பெற்றது.  மட்டக்களப்பு ஆதீனத்தின் ஏற்பாட்டில்   மட்டக்களப்பு மாவட்ட சிவ தொண்டர் திருக்கூடமும் இணைந்து செந்தமிழ் ஆகமத்தில் நடைபெறும்  யாக பூசையினை நடாத்தினர்.

 

அதன்பின்னர் ஆதிவேலுக்கு கும்பாவிசேகம் இடம்பெற்றதும் அலங்கார விசேட பூசை நடைபெற்றது. அதன்பின்னர் செந்மிழ் ஆகமத்தில் அதிகாலை பூசை இடம்பெற்றதுடன் இவ்வருடத்திற்கான லங்கார உற்சவம் இனிதே நிறைவடைந்தது.

 

பாதயாத்திரிகளின் பாதுகாப்பு கருதி கிரான் வனஜீவராசிகள் பகுதி உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கியதுடன் கிரான் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு தலைமையில் அன்னதான பணி இடம்பெற்றதுடன் இரவு யாக விசேட பூசைளிலும் பிரதேச செயலாளர் கலந்துகொண்டிருந்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: