14 Oct 2022

கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சமயத் தலைவர்களுக்கான "திறன் விருத்தி செயலமர்வு"

SHARE

 கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சமயத் தலைவர்களுக்கான "திறன் விருத்தி செயலமர்வு"

மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட சமயத் தலைவர்களுக்கான "திறன் விருத்தி செயலமர்வு" மட்டக்களப்பு

மன்றேசா பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி ஏ.யேசுதாசன், சர்வமத ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ வீ.கே.சிவபாலன் குருக்கள், சர்வமத ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கே.ஜெகதாஸ், சர்வமத ஒன்றியத்தின் உபதலைவர் மௌலவி சாஜஹான்,  அமெரிக்கன் சிலோன் மிசனின் கிழக்கு பிராந்திய குருமுதல்வர் அருட்பணி எம்.லூகேயோன் (லூக்)
 உள்ளிட்ட சர்வமத ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச பல் சமய ஒன்றியங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,
மற்றும் சமய தலைவர்கள், மாவட்ட பல்சமய சம்மேளன நிர்வாக குழு அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பன்முகத்தன்மை தொடர்பாக விழிப்புணர்வூட்டப்பட்ட இச் செயலமர்வின்போது பல்சமய சூழலை புரிந்துகொள்வதன் அவசியம், ஞாபகங்களை குணமாக்குதல், பன்முகத்தன்மையின் அவசியம், சமய, சமூக தலைவர்கள் இவை தொடர்பாக எவ்வாறு தமது முன்னெடுப்புகளை முன்னெடுத்தல், சமயத்தலைவர்களின் பங்களிப்புக்கள் போன்றைவை தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.   

இதன்போது தற்போதைய கால கட்டத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து வளவாளராக கலந்துகொண்ட இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் கல்முனை குருமுதல்வர் அருட்தந்தை சுஜிதர் சிவநாயகம் விளக்கமளித்திருந்தார்.

அதேவேளை மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக சமயத் தலைவர்கள் ஊடாக சமூகத்தின் முன்னேற்றமும் சமூக மாண்பை மேம்படுத்தல் போன்ற மேலும் பல இவ்வாறான செயற்திட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



















SHARE

Author: verified_user

0 Comments: