13 Aug 2022

நாட்டுக்குறிய நிலையான கொள்கை தயாரித்தல் மாகாண சபையை வலுப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு தெற்கு இளைஞர் அமைப்புக்கள் கைகோர்ப்பு.

SHARE

நாட்டுக்குறிய நிலையான கொள்கை தயாரித்தல் மாகாண சபையை வலுப்படுத்தல் வேலைத்திட்டத்திற்கு தெற்கு இளைஞர் அமைப்புக்கள் கைகோர்ப்பு.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நாட்டில் நிலவும் தற்போதைய நிலவரத்தை சாதகமான திசையை நோக்கி செலுத்தும் நோக்கில் ஜனநாயக  இளைஞர் கூட்டமைப்பு, பசுமை பிரஜைகளின் தேசிய அமைப்பு, இலங்கை இளைஞர் ஒன்றியம் மற்றும் ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட இளைஞர் கருத்தாடல்கள் மூலமாக ஒன்று சேர்க்கப்பட்ட தேசிய கொள்கைத்திட்டங்களடங்கிய இளைஞர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி, 43வது பிரிவு, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகளுக்கு கையளிக்கப்பட்டதாக ஜனநாயக இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர் மதுசங்க ரட்நாயக்க சனிக்கிழமை(13) தெரிவித்தார்.

மேலும் குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புக்களின் இளைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை சந்தித்து முன்னோக்கிய வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

நாட்டுக்கு நிலையான கொள்கையொன்றை ஏற்படுத்த அனேக அரசியல் கட்சிகள் மற்றும் சிவிலமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட சாதகமான பதில்களை வழங்கியதுடன், சிவிலமைப்புக்கள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி மாகாண சபையை  வலுப்படுத்துவதற்காக இளைஞர்கள் வழங்கிய முன்மொழிவுகளை திடமாக செயற்படுத்த கைகோர்ப்பதற்கான விருப்பத்தையும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: