2 Aug 2022

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஜுலை  18 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன் இவ்வாண்டில் மொத்தமாக 901 பேர் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

இவ்வருடம்  எமது மாவட்டத்தில் அதிகளவான  டெங்கு நோயாளர்கள்   பாதிக்கப்பட்டிருக்கின்றமை தரவுகள் மூலம்  கணிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயின் தாக்கத்தினை உணர்ந்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுவதுடன்  வீடுகளில் நீர் தேங்கியிருக்கும்  இடங்களை  அகற்றி  டெங்கு நுளம்புகள் பெருகுவதை  தடுத்து எமது சுற்றுப்புற சூழலை  சுகாதாரமுறையில்  பேணுவது  எமது கடமையாகும்.

பெறுமதியான மனித உயிரை பாதுகாப்பதற்கு  அனைவரும் ஒன்றாய் செயற்பட்டு எமது  நாட்டில் இருந்து டெங்குவை ஒழிப்பதற்கு  ஒவ்வொருவரும் திடசங்கற்பம்  பூணவேண்டியது  காலத்தின் கட்டாயமாகும்.



SHARE

Author: verified_user

0 Comments: