7 Jun 2022

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம்" - கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால் சிரமதானப் பணி.

SHARE

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  "பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம்" - கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால் சிரமதானப் பணி.

உலக சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  "பசுமையான உலகை உருவாக்க ஒன்றிணைவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வாவிக்கரையோரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வொன்று  ஞாயிற்றுக்கிழமை(05)  முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப் பணியானது புளியடிக்குடா, பெரிய உரிபோடை, சின்ன உப்போடை மற்றும் முனிச் வீதியை அண்டிய வாவிக்கரையோரங்களில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், அருட்தந்தை ஜீ.டிலிமா அடிகளார், கரிதாஸ் எகெட் நிறுவன உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சர்வமத ஒன்றிய உறுப்பினர்கள், எகெட் சூழல் பாதுகாப்புக் குழுக்கள், எகெட் சமாதானக் குழுக்கள், எகெட் சர்வமதக் குழுக்கள், எகெட் இளைஞர் குழுக்கள், சின்ன உப்போடை, பெரிய உப்போடை மற்றும் புளியடிக்குடா

வாழ் மக்கள் என பெருமளவிலானோர் இதன்போது கலந்துகொண்டு சிரமதானப் பணியினை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி ஏ.யேசுதாசன் அடிகளாரது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட குறித்த தூய்மைப்படுத்தும் செயற்பாடானது,  கரிட்டாஸ் எகெட் நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் (SSEP) கீழ் முன்னெடுக்கப்பட்டதுடன், இதற்கான நிதிப்பங்களிப்பினை கரிட்டாஸ் ஸ்ரீலங்கா தேசிய மத்திய நிலையத்தின் (SEDEC) ஏற்பாட்டில் Missereor  நிறுவனம் வழங்கி வைத்துள்ளதுடன், சுகாதாரமான சூழலை உருவாக்க குறித்த நிறுவனம் முன்னின்று செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 



















SHARE

Author: verified_user

0 Comments: