3 Jun 2022

நாட்டில் 15 வீதம் ஆக காணப்பட்ட புகைப்பிடித்தல் அளவு தற்போது 9.1 வீதமாக குறைவடைந்துள்ளது - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன்.

SHARE

நாட்டில் 15 வீதம் ஆக காணப்பட்ட புகைப்பிடித்தல் அளவு தற்போது 9.1 வீதமாக குறைவடைந்துள்ளது - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன்.  

எமது நாட்டில் 15 வீதம் ஆக காணப்பட்ட புகைப்பிடித்தல் அளவு தற்போது 9.1 வீதமாக குறைவடைந்து மிகச்சிறந்த முன்னடைவை நோக்கிச் செல்வதனை காணக்கூடியதாய் உள்ளதுஇது தொடர்பாக விழிப்பூட்டும் விளம்பரப்பலகை ஒன்று பொதுமக்கள் பார்வையிடக்கூடிய இடத்தில் எமது பணிமனைக்கு வெளியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் இப்பிராந்தியம் புகையிலைப் பாவனைக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசமாக நிச்சயப்படுத்தப்பட இருக்கின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

தேசிய புகையிலை அற்ற தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஜீ.சுகுணன் தலைமையில், மட்டக்களப்பு சுகாதார பிராந்திய  பணிமனையில் புகையிலை அற்ற பிரதேசமாக அதனை அண்டிய பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக காட்சிப்படுத்தல் விளம்பரப் பலகை ஒன்று செவ்வாய்கிழமை(31) திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்  இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

எமது நாட்டில் புற்றுநோய் மற்றும் சுவாசப்பை நோய்களை பெருமளவில் ஏற்படுத்தும் மிகப் பிரதான காரணிகளாக புகைப்பிடித்தலும் அதனுடன் இணைந்த புகையிலை சார்ந்தவற்றை உற்கொள்ளுதலுமே காணப்படுகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு தேசிய புகையிலைத் தடுப்பு தினத்தைக் அனுஸ்ட்டிக்கின்றது. அதை முன்னிட்டுநாட்டாஅமைப்புடன் இணைந்து சுகாதார அமைச்சு நாடலாவிய ரீதியில் பல பிரதேசங்களில் புகையிலை அற்ற இடங்களை தெரிவு செய்து அதை அமுல்படுத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் இலங்கை பூராக புகையிலை பாவிப்பதை நிறுத்தும் முகமாகவும், புற்றுநோய், சுவாசப்பை நோய்களை தடுக்கும் முகமாகவும் பாரியளவில் இந்நடவடிககைகள் எடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒன்றுக்கும் மேற்பட் புகையிலை பாவனை அற்ற இடங்களை உருவாக்க மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்அந்த இடங்களில் புகையிலை பாவிப்பதோவிற்பதோ அல்லது அது சம்பந்தப்பட்டவற்றை கையாழ்வதோ நிறுத்தப்படும்இது மக்களுக்கு அறிவூட்டுவதிலிருந்து ஆரம்பித்து சட்ட நடவடிக்கைகள் வரை கையாண்டு பூர்த்தி செய்யப்படும்.

எமது நாட்டில் 15 வீதம் ஆக காணப்பட்ட புகைப்பிடித்தல் அளவு இன்று 9.1 வீதமாக குறைவடைந்து மிகச்சிறந்த முன்னடைவை நோக்கிச் செல்வதனை காணக்கூடியதாய் உள்ளதுமட்டக்களப்பு பூராக புகைத்தல் அற்ற அல்லது புகையிலைப் பாவனை அற்ற இடமாக உருவாக்குவது அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும்மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிமனையும்தொற்றா நோய்க்கான பிரிவும் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் இணைந்து பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களை முதன்மையாகக் கொண்டு இவ்விடயம் முன்னெடுக்கப்படுகின்றனஎன அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: